இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 74 ஆயிரத்து 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 918 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 74 ஆயிரத்து 383 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 லட்சத்தை கடந்துள்ளது. 60,77,977 பேர் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். மேலும் 918 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 1,08,334-ஆக அதிகரித்துள்ளது.