இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 76 லட்சத்தை நெருங்கி வரும் நிலையில் வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 46, 791 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75,97,064 ஆக உயர்ந்துள்ளது. இதில் 7,48,538 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா தொற்று இருந்து ஒரே நாளில் 69,721 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் இதுவரை 67,33,329 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
உயிரிழப்பை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் 587 பேர் மரணம் அடைந்து உள்ளதாகவும் மொத்த பலி எண்ணிக்கை 1,15,197 ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.