இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 44,281 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 86,36,000 கடந்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 44,281 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை என்பது 86,36,012 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 4,94, 657 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்பை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் 512 பேர் மரணமடைந்துள்ளனர்.
இதன் மூலம் நாடு முழுவதும் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 1,27,571-ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 50,326 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 80,13,784 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.