Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் CORONA நான்காவது அலை…. ஐஐடி பேராசிரியர் திடீர் விளக்கம்…..!!!!

உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு மற்றும் முக கவசம் என பல கட்டுப்பாடுகளை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவை பொறுத்தவரை 98 சதவீத மக்களுக்கு மேல் இயற்கையாகவே எதிர்ப்பு சக்தி கொண்டிருப்பதாக ஐஐடி பேராசிரியர் அகர்வால் தெரிவித்துள்ளார். நமது மக்களின் உடல் நிலையும் சீனாவின் உடல் நிலையும் ஒரே மாதிரியானது இல்லை என்பதால் அங்கு நடப்பது போல் இங்கு நடக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார். புதிய வகை வைரசால் இந்தியாவில் சிறிய தாக்கம் இருக்கும் என்றாலும் அதனை நான்காவது அலை என சொல்ல முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |