இந்தியாவில் எத்தனையோ ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தாலும் 0 ரூபாயும் புழக்கத்தில் தான் இருக்கிறது.
இந்தியாவில் 1 ரூபாய் முதல் 2,000 ரூபாய் நோட்டுகள் வரை புழக்கத்தில் இருக்கிறது. ஆனால் 0 ரூபாய் என்ற நோட்டும் புழகத்தில் இருப்பது எத்தனை பேருக்கு தெரியும். இந்த 0 ரூபாய் நோட்டுகள் எதற்காக பயன்படுகிறது என்பது குறித்து பார்ப்போம். இந்த 0 ரூபாய் நோட்டுகள் 2007 ஆம் ஆண்டிலிருந்து புழக்கத்தில் இருக்கிறது. இந்த ரூபாய் நோட்டுகளை 5th Pillar என்ற நிறுவனம் அச்சடித்து வெளியிட்டுள்ளது.
இது லஞ்ச ஒழிப்பை தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட ரூபாய் நோட்டு ஆகும். உங்களிடம் யாரேனும் லஞ்சம் கேட்டால் அவர்களிடம் 0 ரூபாய் நோட்டுகளை கொடுக்கலாம். இதன் மூலமாக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இந்தியாவில் 25 லட்சம் 0 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருக்கிறது. மேலும் 0 ரூபாய் நோட்டுகள் பயன்படுகிறதா, இல்லையா என்பது மக்கள் கையில்தான் உள்ளது.