நடிகர் மாதவன் மகன் வேதாந்த் மாதவன், டென்மார்க்கில் நடந்த நீச்சல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்காக தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். ஏற்கனவே ஆடவருக்கான 1.500 மீ ஃப்ரீஸ்டைல் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்ற வேதாந்த், தற்போது 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவு சி பைனலில் பந்தய இலக்கை ஒரு நிமிடம் 54.20 வினாடிகளில் கடந்து தங்கத்தை தட்டிச் சென்றார். மேலும் இதே பிரிவின் ஏ பைனலில் இந்தியாவின் தனிஷ் சார்ஜ் நான்காவது இடம் பிடித்தார். இதையடுத்து இவர்களுக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Categories