Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

இந்தியாவுக்காக நிற்போம்… கைகொடுக்கும் பாகிஸ்தான்…. தெறிக்க விடும் ஹேஸ்டேக் …!

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் ஒரே நாளில் இல்லாத பாதிப்பாக மூன்று லட்சத்தை கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு இந்தியாவில் எட்டியுள்ளது.கொரோனாவுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றன. ஆனாலும் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒரு புறம் நாடு முழுவதும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்ற செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன.

இந்தியாவிற்கு இந்தப் பேரிடர் கால கட்டத்தில் பல நாடுகள் உதவ முன்வந்துள்ளன. அண்டை நாடான பாகிஸ்தான் இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து 50 ஆம்புலன்ஸ்களை அனுப்பி வைப்பதற்காக பாகிஸ்தானை சேர்ந்த Edhi அறக்கட்டளை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில் தற்போது  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கொரோனா போரில் இந்தியாவுக்கு துணை நிற்போம் என ட்விட் போட்டுள்ளார்.

இது குறித்து கருத்து பதிவிட்டுள்ள அவர்,  கொரோனவை எதிர்த்து போராடும் இந்திய மக்களுடன் எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்த விரும்புகின்றேன். அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் ட்விட்டரில் #PakistanstandswithIndia என்ற ஹேஷ்டாக் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகின்றது.

https://twitter.com/its_FatimaJutt/status/1385719264204763138

 

Categories

Tech |