Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியாவுக்காக மீண்டும் களம் இறங்குகிறார் சேவாக்? உற்சாகத்தில் ரசிகர்கள் …!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பெரும்பாலான வீரர்கள் காயம் அடைந்துள்ளதால் இந்திய அணிக்காக மீண்டும் களமிறங்க தயார் என விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில் ஒன்றுக்கு ஒன்று என இந்த தொடர் சமநிலையில் உள்ளது. இது தொடரின் ஆரம்பம் முதலே இந்திய வீரர்களை காயம் விடாமல் துரத்தி வருகிறது. குறிப்பாக முகமது ஷமி, உமேஷ் யாதவ், கேஎல் ராகுல், ஜடேஜா, விகாரி போன்ற முன்னணி வீரர்கள் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளனர். இதனால் எஞ்சியுள்ள வீரர்களை மட்டுமே வைத்து 4வது டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டிய சோதனையை இந்திய அணி எதிர்கொண்டுள்ளது.

இந்த நிலையில் அந்த போட்டிக்கு இந்திய அணியில் விளையாட வேண்டிய 11 வீரர்களை தேர்வு செய்ய சிக்கல் இருந்தால் ஆஸ்திரேலியாவுக்கு பறக்க நான் தயார் என வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். வீரேந்திர சேவாக் இதற்காக எனது ஓய்வு முடிவிலிருந்து கூட பின் வாங்கிக் கொள்வேன். நான் தனிமை படுத்த வேண்டியுள்ளது எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என ஹிந்தி மொழியில் நகைச்சுவையுடன் டுவிட்டர் செய்துள்ளார். ஒருவேளை இது நடக்கும் பட்சத்தில் 90கிட்ஸ் ரசிகர்கள் உற்சாகத்துக்கு பஞ்சமே இருக்காது.

Categories

Tech |