இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்தபோது பல நாடுகள் பயண கட்டுப்பாடுகள் விதித்தது. மேலும் ஒருசில நாடுகள் இந்தியாவுக்கான விமானப் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இதனிடையில் அமெரிக்க நாடும் இந்தியாவுக்கான பயணக் கட்டுப்பாடுகளை விதித்தது. இதையடுத்து கொரோனா தாக்கம் காரணமாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதை பரிசீலனை செய்ய வேண்டும் என குடிமக்களை அமெரிக்கா அறிவுறுத்தியது. பின் இந்திய நாட்டிற்கு பயணம் செய்வதில் விதிக்கப்பட்ட விதிமுறைகளை அமெரிக்கா தளர்த்தியது.
இந்நிலையில் இந்திய நாட்டிற்கான பயண கட்டுப்பாடுகளை மேலும் அமெரிக்கா நீக்கியுள்ளது. இதனிடையில் கொரோனா பாதிப்புள்ள நாடுகளை 4 வகையாக பிரித்துஇருக்கிறது. நிலை 4 பட்டியலிலுள்ள நாடுகளுக்குகட்டாயம் பயணம் மேற்கொள்ளக்கூடாது என்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா அபாயம் பட்டியலில் இந்தியாவின் நிலை 3ல் இருந்து நிலை 1-க்கு அமெரிக்கா மாற்றியுள்ளது.
இந்தியாவில் இப்போது கொரோனா தாக்கம் பெருமளவு குறைந்து இருப்பதால் இந்தியாவை நிலை 1-க்கு அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் மாற்றியுள்ளது. அதனை தொடர்ந்து நிலை 3ல் இருந்து (உயர்) நிலை 1-க்கு (குறைவு) இந்தியா மாற்றப்பட்டு இருப்பதால் அமெரிக்காவில் இருந்து பயணம் செய்வது எளிதாகியுள்ளது. இதேபோன்று கினியா மற்றும் நமீபியா நாடுகளும் நிலை 1-க்கு மாற்றப்பட்டு உள்ளது. நிலை 1 என்பது தடுப்பூசி செலுத்தப்படாத அமெரிக்கர்களை மட்டும் அந்நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு வலியுறுத்துகிறது.