உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு ஆதரவாக இந்தியா உள்ளதாக பரவலாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தியா வந்துள்ள அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் தலீப் சிங் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அவர் பேசியதாவது ரஷ்யா தனது ஆக்ரோஷமான போக்கை நிறுத்திக் கொள்ளாவிட்டால் அந்த நாட்டின் மீது தொடர்ந்து பொருளாதார தடைகள் விதிக்கப்படும். இதனிடையில் சீனா மற்றும் ரஷ்யா அண்டைநாடுகள் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்க்கின்றன.
ஆகவே இந்தியா மீது சீனா மீண்டும் அத்துமீறி தாக்குதல் மேற்கொண்டால் அப்போது இந்தியாவுக்கு உதவியாக ரஷ்யா வராது. இந்த எச்சரிக்கையை இந்தியா புரிந்துக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார். அதனை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமைச்சரவையில், சர்வதேச பொருளாதார விவகாரங்களை தலீப் சிங் கையாண்டு வருகிறார். சமீப வாரங்களாகவே ரஷ்யாவின் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டதற்கு தலீப் சிங்கே முக்கியமான காரணம் என கூறப்படுகிறது.