Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்தியாவுக்கு எச்சரிக்கை!…. அடுத்த 2 வருடங்களில் இது நடக்கும்…. சீமான் சொன்ன பகீர் தகவல்….!!!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, “இவர்கள் ரூ.5,000 கோடி வரை ஒவ்வொரு தேர்தலின் போதும் செலவிடுகிறார்கள். ஆனால் தற்போது முதல்வர் ரூ.6,500 கோடி முதலீடு கொண்டு வந்துள்ளதாக கூறுகிறார். லுலு மார்கெட் முதலீடே அன்னிய முதலீடு. வட இந்தியர்கள் தான் லுலு மார்கெட் முழுவதும் வேலை செய்ய போகிறார்கள். பின்னர் வட இந்தியர்களே இங்குள்ள நிலைபாடுகளையும், அரசியலையும் தீர்மானிப்பார்கள். இது முழுக்க முழுக்க பேராபத்தை நோக்கி தான் செல்லும்.

துபாய்க்கு ஐஏஎஸ் உள்ளிட்ட அனைத்து அரசு அதிகாரிகளும் சென்று வந்துள்ளார்கள். திமுக எதற்காக அரசு அதிகாரிகளின் செலவை ஏற்க வேண்டும் ? என்ற கேள்வி எழுகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இலங்கையில் நடைபெற்று வரும் பொருளாதார சரிவு இந்தியாவுக்கும் வரும். இங்கும் 2 ஆப்பிள் ரூபாய் 450 என்ற நிலை வரும். நாம் ஏற்றுக் கொண்டுள்ள பொருளாதாரக் கொள்கை அவ்வாறு உள்ளது” என்று சீமான் பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.

Categories

Tech |