இந்திய நாடு மற்றும் போட்டி நாடுகளுக்கு எதிராக ஆபத்தான ஆயுதங்களை சீனாவுடன் இணைந்து பாகிஸ்தான் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவின் வூஹான் மாகாணத்தில் உள்ள வைரஸ் ஆராய்ச்சி மையத்திலிருந்தே கொரோனா வைரஸ் வெளியானதாக குற்றச்சாட்டு உள்ளது. ஆனாலும் இந்த குற்றச்சாட்டை மருத்துவ நிபுணர்களும் விஞ்ஞானிகளும் மறுத்து வருகின்ற நிலையில் ஆஸ்திரேலியாவின் தி கிளாக்சன் என்ற செய்தி நிறுவனம் அண்மையில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், இந்தியா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக ஆபத்தான உயிரியல் ஆயுத திறன்களை விரிவுபடுத்த மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் சீனாவும் பாகிஸ்தானும் கையெழுத்திட்டுள்ளது. ஆபத்தான ஆந்த்ராக்ஸ் தொடர்பான பல ஆராய்ச்சி திட்டங்கள் , இந்த ஒப்பந்தத்தில் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்த தகவலை முற்றிலும் தவறு என்று கூறிய பாகிஸ்தான், இது அரசியல் ரீதியாக சித்தரிக்கப்பட்டது எனவும் முற்றிலும் உண்மைக்கு அப்பாற்பட்டது எனவும் தெரிவித்துள்ளது.