Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான தொடர்….. ஷானகா தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு..!!

இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்து 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் தொடரில்விளையாடுகிறது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி வரும் 3ஆம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதில் டி20 தொடருக்கான இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழி நடத்துவார் என்றும், ஒருநாள் தொடரில் இந்திய அணியை ரோஹித் சர்மா வழி நடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இந்த தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இலங்கை பிரிமியர் லீக்கில் சமீபகாலமாக அசத்தி வரும் அவிஷ்கா பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரமா,  கருணாரத்னே ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சண்டிமால், அசிதா பெர்னாண்டோ, லக்ஷன் ஆகியோர் கழட்டி விடப்பட்டுள்ளனர். டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கு கேப்டனாக தசும் ஷானகா தொடர்கிறார். மேலும் டி20 தொடருக்கு துணைக்கேப்டனாக ஹசரங்காவும், ஒரு நாள் தொடருக்கான துணை கேப்டனாக குசால் மெண்டிசும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை அணி : 

தசுன் ஷனகா (கே), பதும் நிஷாங்கா,  அவிஷ்கா பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரமா, குசல் மெண்டிஸ், பானுகா ராஜபக்ச (டி20 போட்டிகளுக்கு மட்டும்), சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, வனிந்து ஹசரங்கா, அஷேன் பண்டாரா,  மகேஷ் தீக்ஷனா, ஜெஃப்ரி வாண்டர்சே( ஒருநாள் போட்டிகளுக்கு மட்டும்), சாமிகா கருணாரத்ன
தில்ஷான் மதுஷங்கா, கசுன் ரஜிதா, நுவனிது பெர்னாண்டோ (ஒருநாள் போட்டிகளுக்கு மட்டும்), துனித் வெல்லலகே, பிரமோத் மதுஷன், லஹிரு குமாரா,  நுவான் துஷாரா (டி20 போட்டிகளுக்கு மட்டும்).

Categories

Tech |