ட்விட்டர் மற்றும் மெட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்தடுத்து தங்களுடைய நிறுவனங்களின் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கியது. இதனால் வேலை இழந்த ஊழியர்கள் பெரும் சங்கடத்துக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் ட்விட்டர் மெட்டா உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களில் வேலை இழந்தவர்களுக்கு DREAM 11 வாய்ப்பு வழங்க முன் வந்துள்ளது.
அதன்படி அதன் சிஇஓ ஹரிஷ் ஜெயின் வெளியிட்டுள்ள twitter பதிவில், வேலை பெற விரும்புவோர் தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் அமெரிக்காவில் பெரும் வேலை இழப்பு காரணமாக அவர்கள் அனைவரும் இந்தியா திரும்பி வந்து இங்கு தொழில்நுட்பத்து துறையை மேம்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.