கொரோனா காலத்தில் செர்பியாவுக்கு உதவியதற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி கூறியுள்ளார்.
அரசு முறை பயணமாக செர்பியா நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி நிக்கோலா சிம்போலிக் இந்தியா வந்துள்ளார். அவர் மத்திய மந்திரி ஜெய்சங்கரை இன்று டெல்லியில் சந்தித்தார். மேலும் இந்த சந்திப்பின்போது இந்தியா செர்பியா இடையேயான உறவை வலுப்படுத்துவது, குறித்து முடிவெடுக்கப்பட்டது. மேலும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கிய பணி குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
அதன் பின்னர் செர்பிய வெளியுறவுத்துறை மந்திரி நிக்கோலா செல்கோவிக் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கொரோனா காலத்தில் இந்தியா செர்பியா வுக்கு உதவி செய்ததற்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.