Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவுக்கு மோடி செய்த துரோகம்”….. தீயை கிளப்பிய பாஜக மூத்த தலைவர்…. பெரும் பரபரப்பு…!!!

தமிழகத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி சாமி. பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் பல்வேறு விஷயம் குறித்து அடிக்கடி கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்குவது வழக்கம். பாஜகில் இருந்து கொண்டு சொந்தக் கட்சியை கிழித்து தொங்கவிடுவது சுப்பிரமணி சாமிக்கு கைவந்த கலை. இருப்பினும் பாஜக மேலிடம் அது குறித்து எப்போதும் கருத்து தெரிவிக்காது. ஒருவேளை சுப்ரமணியசாமி கருத்துச் சர்ச்சை ஏற்படுத்துமானால், அது சுப்பிரமணியசாமி சொந்த கருத்து, கட்சி கருத்து இல்லை என்று பாஜக அறிவித்து விடும். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சுப்பிரமணி சாமி மத்திய அரசு குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்னெடுத்து வருகிறார். குறிப்பாக இந்தியாவின் பொருளாதாரம், இந்தியா-சீனா எல்லை விவகாரம் குறித்து பகிரங்கமாக விமர்சித்து நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில்  பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணி சுவாமி தெரிவித்திருக்கும் கருத்து பாஜக தலைமை மற்றும் பிரதமர் மோடி வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, சுப்ரமணி சாமி தன்னுடைய twitter பதிவில், லடாக் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தை சீனாவின் ஒரு பகுதியாக காட்டும் விதமாக சீன மொழியில் அந்த பகுதிகளை குறிப்பிட்டு சீனா எஸ்பிஓ வழங்கியிருக்கிறது. மோடியின் கூட்டத்துக்கு சென்று, இந்தியாவின் தேச நலனுக்காக துரோகம் செய்துள்ளார். கடந்த 1995ஆம் ஆண்டு பரஸ்பரம் ஒப்புக்கொண்ட எல்லை கட்டுப்பாடு கோடுகளை கடந்து டெப்சாங், கல்வான், கைலாஷ் மலைகளின் பெரும் பகுதிகளை சீனா ஆக்கிரமித்து உள்ளது. ஆனால் இதைப்பற்றி எல்லாம் மோடி கண்டு கொள்ளாமல் உள்ளார் என்று அவர் சாமி பதிவிட்டுள்ளார். மேலும் சுப்பிரமணி சாமி இந்த பதிவு பாஜகவில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |