Categories
உலக செய்திகள்

இந்தியாவுக்கு வரும் 3ஆவது ஆப்பிள் போன் தயாரிப்பு நிறுவனம்..!!

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பினை அசம்பிள் செய்து கொடுக்கும் ‘பேகட்ரான் கார்ப்’ நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி ஆலையை அமைக்க முடிவெடுத்துள்ளது.

உலகிலுள்ள முன்னணி மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களின் முதலீட்டினை ஈர்க்கக்கூடிய திட்டத்தினை இந்திய அரசானது ஜூன் மாதத்தில் அறிவித்திருந்தது. இந்தத் திட்டமானது 6.6 பில்லியன் டாலர் மதிப்புடையது.மேலும் ஊக்கத்தொகையும், உற்பத்தி தயார் நிலையிலிருக்கும் கிளஸ்டர்களை உருவாக்கக்கூடிய அறிவிப்புகள் அனைத்தும் இதில் அடங்கும். இதனை தொடர்ந்து பேகட்ரான் கார்ப் நிறுவனமானது அவர்களுடைய உற்பத்தி ஆலையை இந்தியாவில் உருவாக்க திட்டமிட்டிருக்கின்றது.
மேலும் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பினை தயாரிக்கும் நிறுவனமான ஃபாக்ஸ்கான் மற்றும் விஸ்ட்ரான் கார்ப் ஆகியவை இந்தியாவில் ஆலைகளை நிறுவி இருக்கின்ற நிலையில் பேகட்ரான் நிறுவனமும் ஆப்பிள் நிறுவனத்துடன் சேர்ந்து தயாரிப்புகளை உற்பத்தி செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.

.சீனாவில் தங்களுடைய பங்களிப்பினை குறைத்து கொள்ள வேண்டுமென்ற காரணத்தினால் இந்தியாவின் ஆலையை உருவாக்க உள்ளது. அதுமட்டுமன்றி ஆப்பிள் நிறுவனத்தின் தயரிப்புகளை 50 சதவீதத்திற்கும்  மேலாக இந்நிறுவனமே  தயார் செய்யகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவிற்கு அதிக அளவு முதலீடுகள் வந்து கொண்டிருக்கின்றன. அமேசான் நிறுவனமானது 10 பில்லியன் டாலர் முதலீட்டையும் கூகுள், பேஸ்புக் நிறுவனங்கள் ஜியோ வில் 20 பில்லியன் டாலர் முதலீட்டையும் செய்துள்ளார். அதுமட்டுமன்றி பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களும் முதலீடு செய்து கொண்டிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து இந்தியாவானது உலகிலுள்ள முக்கிய ஸ்மார்ட்போன் உற்பத்தி சந்தையாக விரைவில் மாற வாய்ப்புகள் உள்ளன என்று அறியப்படுகிறது.

Categories

Tech |