Categories
தேசிய செய்திகள்

இந்தியாவுக்கு வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிதியுதவி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன.

இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் கடந்த வாரம்  இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. அதனால் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு தனது ஐபிஎல் ஊதியத்திலிருந்து ஒரு பகுதியை நிதி உதவி செய்வதாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் அறிவித்துள்ளார்.

Categories

Tech |