கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கும் இந்தியாவுக்கு கனடா 10 மில்லியன் டாலர்கள் உதவி செய்யும் என தெரிவித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு போன்ற பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் கொரோனாவால் போராடிவரும் இந்தியாவுக்கு கனடா உதவ போவதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் பிரதமர் பிரதமர் ஜஸ்டின்பி ட்ரூடோ இந்தியாவின் பாதிப்பு நிலை அதிகமாக இருப்பதால் தங்களால் முடிந்த 10 மில்லியன் டாலர்கள் இந்தியாவுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த இக்கட்டான காலகட்டத்தில் எங்கள் உறவுகளுக்கு உறுதுணையாக இருப்போம் என்றும் இந்தியா விரைவில் இந்த பாதிப்பில் இருந்து வெளிவரும் எனவும் தெரிவித்துள்ளார்.