Categories
தேசிய செய்திகள்

இந்தியாவுக்கு 3 பெரும் ஆபத்து… சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை…!!!

இந்தியாவில் மிகப் பெரிய ஆபத்தான 3 மரபணு மாற்ற கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. இதனை அடுத்து இந்தியாவின் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் மும்பையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையே ஏமாற்றி தொற்றை ஏற்படுத்தும் மூன்று மரபணு மாற்ற கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக டாடா நினைவு மருத்துவமனை ஆய்வு நிறுவன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ் பிரிட்டன் மரபணு மாற்ற வைரசை விட மிகவும் ஆபத்தானது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த திடீர் அறிவிப்பால் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.

Categories

Tech |