Categories
தேசிய செய்திகள்

இந்தியாவுடனான விமானப் போக்குவரத்து துண்டிப்பு…. ஹாங்காங் அரசு அதிரடி..!!

இந்தியாவுடனான விமான போக்குவரத்து சேவையை துண்டித்துக் கொள்வதாக ஹாங்காங் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து சேவை பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவுடனான விமான போக்குவரத்து சேவையை ஹாங்காங் அரசு நாளை முதல் மே 3ஆம் தேதி வரை ரத்து செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதேபோன்று பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் நாட்டுடனான விமான சேவையையும் ரத்து செய்துள்ளது.

Categories

Tech |