Categories
உலக செய்திகள்

இந்தியாவுடன் ஒப்பந்தம்….. வலுக்கும் எதிர்ப்பு….. போராட்டத்தில் இறங்கிய தொழிலாளர்கள்…!!

இந்தியாவுடன் கொழும்பு ஆழ்கடல் சரக்கு பெட்டக முனையம் மேம்படுத்த ஒப்பந்தம் போட்டதை எதிர்த்து போராட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் இருக்கின்ற ஆழ்கடல் சரக்கு பெட்டக முனையம் மேம்படுத்துவதற்காக இந்தியாவுடன் முந்தைய இலங்கை அதிபர் சிறிசேனா ஒத்துழைப்பு அளித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இத்தகைய ஒப்பந்தமானது காலாவதி ஆகியுள்ள நிலையில் இந்தியாவுடன் இலங்கை அரசு தற்போது முறையான ஒப்பந்தத்தினை செய்து கொள்வதற்கு திட்டமிட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து கொழும்பு துறைமுக தொழிலாளர்கள், அவரவர் கைகளில் கருப்பு பட்டையை அணிந்து ஒரு வாரத்திற்கு மேலான போராட்டத்தினை தொடங்கியிருக்கின்றனர். மேலும் சரக்கு பெட்டக முனையத்தினை இலங்கை அரசாங்கமே முழுமையாக மேம்படுத்த வேண்டும் எனவும் எத்தகைய வெளி நாட்டு அரசுக்கும் இத்தகைய பொறுப்பை தரக்கூடாது எனவும் தொழிற்சங்க தலைவர்கள் கண்டிப்பாக கூறியுள்ளனர்.

Categories

Tech |