பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க் கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றியடைந்தது. இதன் காரணமாக இம்ரான் கானின் அரசு கவிழ்ந்தது. அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து இம்ரான் கான் நீக்கப்பட்டார். இதையடுத்து எதிர்க் கட்சி தலைவரான ஷபாஷ் செரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். அவ்வாறு புதிய பிரதமராக தேர்தெடுக்கப்பட்ட ஷபாஸ் செரீப் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார். இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டின் புது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள ஷபாஸ் செரீப்பிற்கு இந்திய பிரதமரானமோடி அவர்கள் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து இந்தியபிரதமர் மோடி தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பாகிஸ்தான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷபாஸ் செரீப்பிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பயங்கரவாதமில்லாத, அமைதியான, நிலைத்தன்மை கொண்ட பிராந்தியத்தை இந்தியா விரும்புகிறது. ஆகையால் நமது வளர்ச்சிக்கான சவால்களை கவனத்தில்கொண்டு நமது மக்களின் நல்வாழ்வு மற்றும் வளமான வளர்ச்சியை உறுதிபடுத்துவோம்” என தெரிவித்து இருந்தார். இதற்கு ட்விட்டர் வாயிலாக செரீப் கூறியிருப்பதாவது “வாழ்த்துக்களுக்கு பிரதமர் மோடிக்கு நன்றி.
இந்தியா உடன் அமைதியான மற்றும் கூட்டுறவு உறவுகளை பாகிஸ்தான் விரும்புகிறது. ஜம்மு மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட நிலுவையிலுள்ள பிரச்சினைகளை அமைதியான முறையில் தீர்த்துவைப்பது இன்றியமையாதது ஆகும். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அமைதியைப் பாதுகாத்திட வேண்டும். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதில் பாகிஸ்தானின் தியாகங்கள் நன்கு அறியப்பட்டவை ஆகும். அமைதியைப் பாதுகாப்பதோடு, நம் மக்களின் சமூகபொருளாதார மேம்பாட்டில் கவனம் செலுத்துவோம் என்று பாகிஸ்தானின் புதிய பிரதமர் ஷபாஸ் செரீப் தெரிவித்துள்ளார்.