டெல்லியில் உள்ள கஸ்தூரிபா நகரில் கடந்த வாரம் இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதோடு ஒரு கும்பலால் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். அந்த சம்பவம் குறித்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இளம்பெண் தாக்கப்படும் வீடியோ குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதில், “கசப்பான உண்மை என்னவென்றால் பெண்களை இந்தியர்கள் பலரும் மனிதர்களாக நினைப்பதில்லை. இது ஒரு வெட்கக்கேடான உண்மை என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.