பாகிஸ்தான் பிரதமரின் இம்ரான் கான் தலைமையிலான அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு வருகிற 3ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த வாக்கெடுப்பில் இம்ரான்கான் தலைமையிலான அரசு தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறினால் ஆட்சி கவிழும். இந்நிலையில் இம்ரான் கான் இந்தியாவை ஆதரிக்கும் ஒரு சக்தி வாய்ந்த நாடு தற்போது பாகிஸ்தான் மீது கோபமாக உள்ளது என தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க ரஷ்யா சென்ற இம்ரான் கான் அமெரிக்காவை சக்தி வாய்ந்த நாடு என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இந்தியாவை ஆதரிக்கும் ஒரு சக்தி வாய்ந்த நாடு பாகிஸ்தானுக்கு எதிராக செயல்படுகிறது என இம்ரான்கான் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Categories