நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இதனால மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். இதனால் மற்ற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படாமல் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இந்நிலையில் உத்திரபிரதேசம் வாரணாசியில் தாய் ஒருவர் தனது இறந்த மகனின் உடலை ஏற்றிச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் கிடைக்காமல் இ-ரிக்ஸாவில் எடுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்ட வினய் என்பவர் ஒவ்வொரு மருத்துவமனையாக சிகிச்சைக்காக சென்றுள்ளார். ஆனால் எந்த ஒரு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவில்லை. பிற நோய்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்காமல் கொரோனா நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளித்ததால் வினய் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் அவருடைய உடலை அவரின் தாய் இ-ரிக்ஸாவில் எடுத்து சென்றுள்ளார். இந்த சம்பவம் இந்தியாவை உலுக்கும் மரணமாக உள்ளது.