இந்தியா பல ஆயுதங்களை கொள்முதல் செய்து ராணுவ ரீதியாக விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது
அமைதியின் சின்னமாக உலகிற்கு வெகு காலங்கள் தனது முகத்தை காட்டி வந்த இந்தியா திடீரென்று பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் தரித்து விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது. யுத்தக் கப்பல்கள், ஒலியை விட வேகமாகப் பயணிக்கக் கூடிய நவீன ஏவுகணைகள், யுத்த தாங்கிகள் என முதல் தரத்தில் உள்ள போர் ஆயுதங்களை நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் இந்தியா தயாரித்து குவிக்கின்றது. அதேநேரம் நவீன ஆயுதங்களை ரஷ்யா மற்றும் மேற்குலகில் இருந்து கொள்முதல் செய்து நம் நாட்டின் ராணுவ பலத்தை அதிகரித்து வருகின்றது. இது சீனாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.