உலக அரங்கில் இந்தியாவை அவமானப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஒரு அறிக்கை தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது என அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பயன்படுத்திய இரண்டு செல்போன்களும் பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டது என்றும், ஒன்றிய நீர்வளத் துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் பெயரும், தேர்தல் ஆணையராக இருந்த அசோக் லவாசா பெயரும் இதில் இடம்பெற்றதாக ஆங்கில பத்திரிகை ‘தி வயர்’ செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் “உலக அரங்கில் இந்தியாவை களங்கப்படுத்தும் நோக்கில் பெகாசஸ் விவகாரம் வெளியாகியுள்ளது; சீர்குலைக்க நினைக்கும் சக்திகளின் சதித்திட்டங்கள் மூலம் இந்தியாவின் வளர்ச்சிப்பாதையைத் தடம் புரளவைக்க முடியாது’ என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.