அண்ணல் காந்தியடிகள் மேற்கொண்ட உப்பு சத்தியாகிரகத்தில் 92வது நினைவு தினத்தை முன்னிட்டு தெற்கு குஜராத்தில் இருந்து தண்டி வரையிலான சைக்கிள் பயணத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, காந்தியடிகள் காட்டிய பாதையில் இருந்து தவறி சென்றது தான் நாம் செய்த மிகப்பெரிய தவறு. பிரதமர் மோடியின் புதிய கல்விக் கொள்கை தாய்மொழியின் முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு காந்தியடிகளின் கருத்து முக்கியத்துவம் அளிக்கும் வண்ணம் உள்ளது.
காந்தியின் கொள்கைகள் அனைத்தையும் பிரதமர் மோடி கடைபிடித்து வருகிறார். அதோடு இந்திய மக்களுக்கும் பரப்புகிறார் . சாதாரண மக்களின் பிரச்சினைகளை அண்ணன் காந்தி புரிந்துகொண்டு தீர்வு கூறினார். அதேபோல்தான் பிரதமர் மோடியும் சாதாரண மக்களின் பிரச்சனைகளை புரிந்து வைத்துள்ளார். ஒவ்வொரு வீட்டிலும் கழிவறை, குடிநீர் இணைப்பு, மின்சாரம் தூய்மை இந்தியா, போன்ற திட்டங்கள் அனைத்தும் காந்தியின் எதிர்கால கனவு களாக இருந்தன இவற்றையெல்லாம் தற்போது பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார்.!” என அவர் கூறினார்.