சேவ் தி சில்ட்ரன் என்ற குழந்தைகள் உரிமை அமைப்பு பிரசல்ஸ் நகரில் உள்ள விரிஜே பல்கலைக்கழகம் இணைந்து ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில் உலகம் முழுவதும் 77.40 கோடி குழந்தைகள் வறுமை மற்றும் பருவநிலை நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.உலக அளவில் கம்போடியாவில் வசிக்கும் குழந்தைகள்தான் வறுமை மற்றும் பருவநிலை தாக்கம் என இரட்டை அச்சுறுத்தலை சந்தித்து முதல் இடத்தில் உள்ளனர்.
அதே சமயம் அங்கு 72 சதவீதம் குழந்தைகளும் மியான்மரில் 64 சதவீதம் குழந்தைகளும் ஆப்கானிஸ்தானில் 57 சதவீதம் குழந்தைகளும் அச்சுறுத்தலை சந்திக்கிறார்கள். மேலும் இந்தியாவில் உள்ள குழந்தைகளின் 51% பேர் வறுமை மற்றும் பருவநிலை நிகழ்வுகளின் பிடிப்பிலும் வாழ்ந்து வருகின்றனர்.
இந்தியாவில் கிட்டத்தட்ட 35.19 கோடி குழந்தைகள் வருடம் தோறும் ஏதேனும் ஒரு பருவநிலை நிகழ்வாள் பாதிக்கப்படுவதாக இந்த ஆய்வு கூறுகின்றது. கேரளா மற்றும் அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு,ஒடிசாவில் வீசும் புயல் எண்ணற்ற குழந்தைகளை வறுமையில் தள்ளி இருப்பதாக இந்த ஆய்வு கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.