இந்தியாவின் இஸ்ரேல் தூதராக இருந்து வரும் நயோர் கிலான் தற்போது இலங்கைக்கும் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா- பூட்டான் நாடுகளுக்கு தூதராக செயல்பட்டு வந்த நயோர் கிலான் தற்போது இலங்கைக்கும் இஸ்ரேல் நாட்டின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இலங்கை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சேவை சந்தித்து, அதற்கான சான்றுகள் அளித்து அதிகாரபூர்வமாக இலங்கை – இஸ்ரேல் தூதராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
மேலும் இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்துப் பேசிய நயோர்கிலான், இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்து பேசினேன். விவசாயம், நீர், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பல துறைகளில் இஸ்ரேலுக்கும் – இலங்கைக்கும் இடையேயுமான ஒத்துழைப்பை மேலும் தீவிரப்படுத்துவது குறித்து நாங்கள் விவாதித்தோம் எனத் தெரிவித்துள்ளார்.