Categories
உலக செய்திகள்

செய்தியாளர் கேட்ட கேள்வி…. என் மகள், மகனுக்கு இந்தியாவ…. பளிச்சென பதிலளித்த ட்ரம்ப்….!!

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் குடும்பம் இந்தியாவை அதிகம் நேசிப்பதாக அமெரிக்க அதிபர் கூறியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதற்கு பின்னர் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையில் நல்ல நட்புறவு ஏற்பட்டுள்ளது. நரேந்திர மோடியின் சிறந்த நண்பராக ஜனாதிபதி டிரம்ப் தற்போது விளங்கிக் கொண்டிருக்கிறார். அதனைப்போலவே ஜனாதிபதி ட்ரம்பின் குடும்பத்தினரும் இந்தியாவுடன் நட்புறவை கொண்டுள்ளது. ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அவரின் குடும்பத்தை சேர்ந்த அவரின் மகள் இவாங்கா ட்ரம்ப் இந்தியாவில் முதலாவதாக சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அவர் இந்தியாவின் விவகாரங்கள் குறித்து பல்வேறு பதிவுகளை ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார்.

அதனால் இந்தியாவில் அவருக்கு ஒரு நட்சத்திர அந்தஸ்து இருக்கின்றது. இந்நிலையில் தானும், தனது மகள் மற்றும் மகன் இந்தியாவை பெரிதும் நேசிப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” எனது மகன் டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர், மகள் இவாங்கா டிரம்ப், எனது ஆலோசகர் ஆகியோர் சிறந்த இளைஞர்கள். அவர்கள் அனைவரும் இந்தியாவை பெரிதும் நேசிக்கிறார்கள். நானும் அவ்வாறே செய்கிறேன். இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நான் அதிகமாக நேசிக்கிறேன். நான் எப்போதும் இந்தியாவின் ஒரு சிறந்த நண்பனாக இருப்பேன்” என்று அவர் கூறியுள்ளார்.

 

Categories

Tech |