Categories
தேசிய செய்திகள்

இந்தியாவை நோக்கி வருகிறது உலகம்… பிரதமர் மோடி புகழாரம்…!!!

உலகம் முழுவதும் மீண்டும் இந்தியாவை நோக்கி வருகிறது என்று பிரதமர் மோடி பெருமிதம் கூறியுள்ளார்.

ஜெயினாச்சார்யா விஜய் வல்ல மகாராஜ் 151 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அமைதி சிலையை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். அதன் பிறகு பேசிய அவர், “சர்தார் வல்லபாய் படேலின், உலகின் மிக உயர்ந்த ஒற்றுமை சிலையை அறிமுகப்படுத்துவதற்கு நாடு தனக்கு வாய்ப்பளித்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்.

அந்த பாக்கியத்தை நான் பெற்றுள்ளேன். ஆச்சர்யா விஜய் வல்லப், பல கல்வி நிறுவனங்களைத் தொடங்கி கல்வித் துறையில் புரட்சியை ஏற்படுத்தியவர். மேலும் நம்முடைய நாடு, மனிதநேயம், அமைதி, அகிம்சை மற்றும் சகோதரத்துவத்தை வழங்கியதற்காக உலகம் மீண்டும் இந்தியாவை நோக்கி வருகிறது” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |