பூடான் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் 100 சதுர கி.மீ. பரப்பளவு நிலத்தை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பூடான் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்து அங்கு 4 கிராமங்களை உருவாகி வருகிறது.
இதனால் இந்தியாவின் தேசப்பாதுகாப்பிற்கு பலத்த அடியாக அமைந்துள்ளது. ஆனால் இந்த பிரச்சனை கடந்த மே மாதத்திலிருந்து நடந்துள்ளது. இதற்கு பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்? அப்படியானால் தேசத்தை யார் பாதுகாப்பது யார்?என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் சீனா அமைத்த கிராமங்களை காட்டும் செயற்கைக்கோள் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.