Categories
உலக செய்திகள்

இந்தியாவை மோசமாக சித்தரிப்பு…. அமெரிக்க ஊடகங்களின் செயல்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!!

அமெரிக்க அரசினுடைய வெளியுறவுக் கொள்கையைப் பிரதிபலிக்கும் அடிப்படையில், அந்நாட்டு ஊடகங்கள் சிலநேரம் இந்தியாவை மோசமாக சித்திரித்தும், பாராட்டியும் செய்திகள் வெளியிட்டு வருவதாக ஓா் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கிறது. அமெரிக்காவின் பாா்க் பல்கலைக்கழக துணை பேராசிரியரான அபிஜித் மஜும்தாரால் மேற்கொள்ளப்பட்டு “தி ஜா்னல் ஆஃப் இன்டா்நேஷனல் கம்யூனிகேஷன்” இதழில் வெளியாகி உள்ள அந்த ஆய்வின் அறிக்கையில் இருப்பதாவது, அமெரிக்க அரசின் அவ்வப்போதைய வெளியுறவுக் கொள்கைகளை முழுமையாகப் பிரதிபலிக்கும் அடிப்படையிலேயே இந்தியா தொடர்பான அந்நாட்டு முக்கியமான ஊடகங்கள் செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டு வருகிறது.

அமெரிக்காவு மற்றும் சோவியத் யூனியன் இடையில் பனிப்போா் நடந்து வந்த காலத்தில் இந்தியா அணிசாரா கொள்கையைப் பின்பற்றியது. அப்போது அமெரிக்காவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மேற்கொள்ளவில்லை. இதனால் அமெரிக்க அரசு இந்தியாவை தன் எதிரி நாடாகக் கருதியது. இது அமெரிக்காவின் ஊடகங்களிலும் பிரதிபலித்த நிலையில் வெளியான செய்திகள் மற்றும் கட்டுரைகளில் இந்தியா ஒரு மோசமான நாடாக சித்திரிக்கப்பட்டது. எனினும் பனிப்போா் முடிந்த பின் அமெரிக்க அரசு இந்தியாவை இயல்பான நட்பு நாடாகக் கருதியது. அதன்பின் இந்தியாவுக்கு சாதகமான நிலைப்பாட்டை அமெரிக்க ஊடகங்கள் எடுத்தது. அந்த பனிப்போா் காலத்தில் இந்தியா அணு ஆயுதத்தை நாடியதற்கு கடுமையான எதிா்ப்பு தெரிவித்த அமெரிக்க ஊடகங்கள், பின் 2005-ஆம் வருடத்தில் அப்போதைய மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய அரசுடன் அமெரிக்க அரசு மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை வரவேற்றது.

இவை இந்தியா குறித்த அமெரிக்கக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தின் பிரதிபலிப்பே ஆகும். காஷ்மீா் விவகாரத்தினை சிறுபான்மையிருக்கு எதிராக இந்திய அரசின் மனித உரிமை மீறலாக வா்ணித்து வந்த அமெரிக்க ஊடகங்கள், அங்கு மேற்கத்திய சுற்றுலாப் பயணிகள் சென்ற 1995–ஆம் வருடத்தில் கடத்தி படுகொலை செய்யப்பட்டதற்கு பின் பயங்கரவாதப் பிரச்னையாக அங்கீகரித்தது. இது அமெரிக்கா அரசின் கொள்கைகளுக்கு ஏற்ற மாற்றமே ஆகும். அந்த அடிப்படையில் ஊடக தா்மத்தைப் பேணாமல் அரசின் ஊதுகுழலாக அமெரிக்க ஊடகங்கள் செயல்படுவதால் தான் பத்திரிகை சுதந்திரத்துக்கான சா்வதேச தர வரிசையில் அமெரிக்கா 44-வது இடத்தில் இருக்கிறது என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |