அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரிச்சர்ட் நிக்சன் இந்தியர்கள் பற்றி தரக்குறைவாக பேசியுள்ள ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 1969 ஆம் ஆண்டு முதல் 1974 ஆம் ஆண்டு வரையில் ரிச்சர்ட் நிக்சன் என்பவர் ஜனாதிபதியாக பதவிவகித்தார். அப்போது ஆயிரத்து 71 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெள்ளை மாளிகையில் உள்ள அலுவலகத்தில் ரிச்சர்ட் நிக்சன், அப்போது இருந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹென்ரி, வெள்ளை மாளிகையின் தலைவர் ஆகியோருக்கு இடையில் உரையாடல் நடந்தது. அந்த உரையாடல் ஆடியோ பதிவு தற்போது வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில் ஜனாதிபதி இந்தியர்கள் பற்றி தரக்குறைவாக பேசியுள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அவர் இந்திய பெண்கள் பற்றி ஆபாசமான வார்த்தைகளையும் இனரீதியாக இந்தியர்களை அவமதி க்கக் கூடிய வகையிலும் பேசியுள்ளார். இந்தியர்களை உடல் ரீதியாக அவர் விமர்சித்துள்ளார். மேலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான விவகாரத்தில் இந்தியர்களை அவர் குற்றம்சாட்டியுள்ளார். மொத்தத்தில் அவர் இந்தியர்கள் மீது எந்த அளவிற்கு வெறுப்பு கொண்டிருந்தார் என்பதை அந்த ஆடியோ பதிவு வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி இருப்பதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.