உரிமைகள் மற்றும் சுயமரியாதைக்காக போராடி வரும் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுடன் காங்கிரஸ் துணை நிற்கும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 10 மாதங்களை எட்டவுள்ள நிலையில் விவசாயிகளின் கோரிக்கைக்கு மத்திய அரசு தற்போது வரை செவிசாய்க்கவில்லை.விவசாயிகளின் உரிமையை மத்திய பாஜக அரசு மறுத்து வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் மத்திய மோடி அரசு அவர்களின் நண்பர்களுக்காக மட்டுமே துணை நிற்பதாகவும் ஆனால் உரிமைகள் மற்றும் சுயமரியாதைக்காக சத்யகிரக வழியில் போராடி வரும் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுடன் காங்கிரஸ் துணை நிற்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை நான் இந்தியாவுடன் நிற்பேன் என்ற ஹேஷ்டாக்க்குடன் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்