Categories
உலக செய்திகள்

இந்தியா அசுத்தமானது, காற்று மாசு அதிகம் …!!

இந்தியா அசுத்தமானது என்றும் காற்றின் மாசு அதிகரித்துள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனல்ட் ட்ரம்ப் மற்றும் ஜோபிடன் இடையிலான இறுதி கட்ட விவாதம்  இன்று நடைபெற்றது. அப்போது இருவரும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக காரசாரமாக விவாதித்தனர். காற்று மாசுபாடு குறித்து பேசி ட்ரம்ப் இந்தியாவை கடுமையாக விமர்சித்தார். சீனா ரஷ்யாவை போன்று இந்தியாவிலும் காற்று மாசடைந்து உள்ளதாகவும் இந்தியா அசுத்தமாக உள்ளதாகவும் கூறினார்.

அமெரிக்காவில் குறைந்த அளவில் கார்பன் வெளியேற்றப்படுவதாகவும் இந்தியாவும், ரஷ்யாவும் பருவநிலை மாற்றம் பிரச்சனையில் முன்னணியில் உள்ள நாடுகள் எனவும் குற்றம் சாட்டினார். இந்தியாவின் காற்று மாசுபாடு குறித்து ட்ரம்ப் விமர்சிப்பது இது முதல் முறையல்ல இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் காற்றின் தரத்தை கவனிப்பதில்லை என்று அண்மையில் நடந்த விவாதத்திலும் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |