Categories
உலக செய்திகள்

இந்தியா-இங்கிலாந்து உறவு மேலும் வலுபெறணும்…. -பிரதமர் போரிஸ் ஜான்சன்….!!!!

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தில் இந்திய மக்களுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வாழ்த்துக்களை தெரிவித்தார். அத்துடன் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவது தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் பேசினார். இந்தியா-இங்கிலாந்து நாடுகளுக்கு இடையில் செழித்துவரும் உறவை மேலும் வலுப்படுத்த ஆவலுடன் இருப்பதை அவர் எடுத்துரைத்தார்.

அவர் கூறிய வாழ்த்துச்செய்தியில் “சுதந்திரமடைந்து 75 வருடங்கள் நிறைவடைந்துள்ள சூழ்நிலையில், இந்திய மக்களுக்கு வாழ்த்துகள். அண்மையில் குஜராத் மற்றும் புதுடெல்லிக்கு நான் வந்திருந்த போது, நம் நாடுகளுக்கு இடையில் செழித்துக் கொண்டிருக்கும் வாழ்க்கைப் பாலத்தை நேரில் பார்த்தேன். இந்த பிணைப்புகள் இரு நாட்டு உறவுகள் அடுத்த 75 வருடங்களில் மேலும் வலுப்பெற வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |