Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா இங்கிலாந்து தொடர்… பார்வையாளர்களுக்கு அனுமதி…!!

இங்கிலாந்து இந்தியா அணிகளுக்கு இடையேயான 5 நாள் கொண்ட தொடர் போட்டியை காண்பதற்கு ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று வெளியிட்டார்.  இந்தியா- இங்கிலாந்து ஐந்தாவது ஒருநாள் போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தப் போட்டியானது டிரன்ட்பிரிட்ஜ் என்ற பகுதியில் நடக்க உள்ளது.

இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளதாவது: விளையாட்டுப்போட்டிகள்,  உள்அரங்குகள், மைதானங்கள் போன்றவற்றில் ரசிகர்கள் அமர்ந்து பார்ப்பதற்கான கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் எந்தவித தடையுமின்றி விளையாட்டை கண்டு ரசிக்கலாம். மேலும் இங்கிலாந்தில் உள்ள அனைத்துக் கட்டுப்பாடுகளும் ஜூலை 19ஆம் தேதி முடிவுக்கு வருவதால் டெஸ்ட் தொடரை நேரில் காண 100% ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Categories

Tech |