இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே மருத்துவ மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபை கூட்டம் நடந்து முடிந்தது. அந்தக் கூட்டத்தில், மருத்துவம் மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தம் மருத்துவர்கள் மற்றும் இதர மருத்துவ பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல், அவர்களை பணிமாற்றம் செய்தார் ஆகியவற்றில் இருக்க ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி மருத்துவ பொருட்கள் ஒழுங்கு செய்வதில் ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லா மற்றும் குலு மாவட்டங்களில் சட்லஜ் ஆற்றின் குறுக்கே அமைந்திருக்கிற 210 மெகாவாட் நீர்மின் திட்டத்தின் 1,810 கோடி ரூபாய் முதலீட்டிற்கு ஒப்புதல் வழங்கியது.