Categories
தேசிய செய்திகள்

இந்தியா என் வாழ்வில் பெரும் பங்கு வகிக்கிறது…. சுந்தர் பிச்சை….!!!!!

தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்தவர் சுந்தர் பிச்சை. உலகின் சக்தி வாய்ந்த தொழில்நுட்ப நிறுவனமான கூகுளின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கிறார். அண்மையில் கலிஃபோர்னியாவில் உள்ள தம்முடைய அலுவலகத்தில் பிபிசி தொலைகாட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியது, “நான் இப்போது அமெரிக்க குடிமகனாக இருக்கின்றேன். ஆனாலும், இந்தியா ஆழமாக என்னுள் பதிந்திருக்கிறது. நான் யாராக இருக்கின்றேன் என்பதற்கு பெரும் பகுதியாக இந்தியாதான் இருக்கிறது.

செயற்கை நுண்ணறிவு எனும் ஏஐ தொழில்நுட்பத்தை ஆழ்ந்த தொழில்நுட்பமாக பார்க்கின்றேன்.இதில்மனித சமூகம் முன் எப்போதையும் விட அதிகம் முன்னெடுக்கவும், பணியாற்றவும் வேண்டும். தீ அல்லது மின்சாரம் அல்லது இணையம் பற்றி நாம் சிந்திப்பது போலத்தான் இதுவும். ஆனால், அதையெல்லாம் விடவும் செயற்கை நுண்ணறிவு மிகவும் ஆழ்ந்த ஒன்று. சீனா முறையிலான இணையம் என்பது கண்காணிப்பில் ஈடுபடுவதாக முன்னேற்றம் அடைந்திருக்கிறது.

இதன் வாயிலாக திறந்தவெளியான இணையம் தாக்கப்படுவதாக இருக்கிறது. கூகுளின் எந்த ஒரு முக்கிய தயாரிப்பும் மற்றும் சேவையும் சீனாவில் இல்லை.
அமெரிக்காவின் வரி வசூலில் எங்களுடைய தயாரிப்புகளுக்கான வரி முக்கிய பங்கு வகிக்கிறது. அமெரிக்காதான் எங்கள் தொடக்கம், இங்கு தான் எங்களது தயாரிப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன.” இவ்வாறு கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறினார்.

Categories

Tech |