2014 முதல் செமி கண்டக்டர் துறையில் இந்தியா கணிசமான முன்னேற்றத்தை கண்டிருக்கிறது என மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜூ சந்திரசேகர் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது 2014 ஆம் வருடம் இந்தியாவில் பயன்படுத்தப்படும் 92 சதவிகித மொபைல் போன்கள் இறக்குமதி செய்யப்பட்டது ஆனால் இன்று இந்தியாவில் பயன்படுத்தப்படும் 97 சதவீத போன்கள் உள்நாட்டில் தயார் செய்யப்பட்டவை. நாம் 12 பில்லியன் என்ற டாலர் மதிப்புள்ள மின்னணு சாதனங்களை ஏற்றுமதி செய்து வருகின்றோம். இந்த நிலையில் புதிய தரவு பாதுகாப்பு மசோதா மிகவும் எளிமையாகவும் நவீனமாகவும் இருக்கும் தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்புக்கான உரிமை இந்தியாவில் அடிப்படை உரிமைகள் தரவு பாதுகாப்பு மசோதா இந்த உரிமைகளை அங்கீகரிப்பதில் மிகவும் முற்போக்கானதாக இருக்கின்றது.
இந்த புதிய தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படுகிறது. முன்னதாக தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா 2021 ஆகஸ்ட் மாதம் அரசு திரும்ப பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான ஸ்டாரர்ட் அப்கள் இருக்கிறது இந்தியாவில் இணையதளம் திறந்த வெளியாக இருக்கிறது இணையத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஜனநாயக நாடுகள் முன்னிலை வகிக்க வேண்டும். மேலும் 2014 முதல் செமி கண்டக்டர் துறையில் இந்தியா கணிசமான முன்னேற்றத்தை கண்டிருக்கிறது. இதனை அடுத்து பாதுகாப்பும் நம்பிக்கையும் அவசியம் ஆன்லைன் விளையாட்டு மற்றும் கிரிப்டோ கரன்சி தொடர்பான பிரச்சனைகள் சாமர்த்தியமாக நிர்வகிக்கப்பட வேண்டும் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையான சூழல் கட்டமைக்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.