Categories
தேசிய செய்திகள்

இந்தியா கேட்டில்…. சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜிக்கு…. 30 அடி உயர சிலை….!!!!

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை டெல்லியில் உள்ள இந்தியா கேட்டில் பழைய அமர்ஜவான் ஜோதிக்கு பின்னால் உள்ள பெரிய விதானத்தின் கீழ் சிலை நிறுவப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 30 அடி உயரமுள்ள இந்த சிலையை மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் செதுக்க உள்ளார்.

சிலை அமைப்பதற்காக தெலுங்கானாவில் இருந்து பெரிய கருப்பு ஜேட் கிரானைட் கல் தேர்வு செய்யப்பட்டு டெல்லி கொண்டு வரப்பட்டு அங்கு பணிகள் நடைபெற உள்ளது. இந்த பணியை ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. சிலையின் வடிவமைப்பு கலாச்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய நவீன கலை அருங்காட்சியகம் குழுவினர் செய்துள்ளனர்

Categories

Tech |