Categories
தேசிய செய்திகள்

இந்தியா கேட்டில் டிராக்டரை எரித்த காங்கிரஸ் கட்சி… ஆறு பேர் கைது… மற்றவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…!!!

வேளாண் மசோதாவிற்கு எதிராக டிராக்டரை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட பஞ்சாப் இளைஞர் காங்கிரஸ் அணியைச் சார்ந்த ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன. வேளாண் மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப் இளைஞர் காங்கிரஸ் அணியினர் போராட்டம் நடத்தினர். அப்போது அந்த அணியை சேர்ந்த 15 முதல் 20 பேர்,ஒரு லாரியில் டிராக்டர் ஒன்று ஏற்றிக்கொண்டு வந்த இந்தியா கேட் அருகே அதனை இறக்கி, தீ வைத்து எரித்தனர். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் டிராக்டரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பஞ்சாப் இளைஞர் காங்கிரஸாரின் இந்த கொடூர செயலுக்கு பாஜக தரப்பில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மேலும் டிராக்டர் எரிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்த இரண்டு வாகனங்களை கைப்பற்றினர். விசாரணை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி கொண்டிருக்கின்றனர். அவர்கள் மீது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுவதை தடுக்கும் சட்டத்தின் கீழ் அவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாத அளவிற்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

Categories

Tech |