Categories
தேசிய செய்திகள்

இந்தியா கொரோனாவிடம் போராட…. ஆர்.பி.ஐ. சலுகை அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது.

அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இருந்தாலும் எந்த ஒரு பலனும் இல்லாமல் இந்தியாவில் இதுவரை இல்லாத உச்சத்திற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதனால் பல நாடுகளும் இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்நிலையில் கொரோனா விற்கு எதிராக போராட ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் சலுகை அறிவித்துள்ளார். மருத்துவமனைகள், ஆக்சிஜன் சப்ளையர்கள்,தடுப்பூசி இறக்குமதியாளர்கள் மற்றும் கொரோனா மருந்துகளாகிய மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை 50 ஆயிரம் கோடி மதிப்பிலான சலுகைகள் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

Categories

Tech |