கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையேயான விமான சேவை பல மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இந்தக் கோரிக்கை தற்போது பரிசீலனை செய்யப்பட்டு பல மாதங்களுக்குப் பிறகு இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான விமான சேவை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. சென்னை -சிங்கப்பூர், டெல்லி- சிங்கப்பூர் மற்றும் மும்பை-சிங்கப்பூர் ஆகிய விமானங்கள் இயக்கப்பட்டு வருவதாகவும், தினமும் இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு 6 விமானங்கள் இயக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.