லக்னோவில் நடைபெற்ற பாதுகாப்பு கண்காட்சி 2020இல் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் மடகாஸ்கர் பாதுகாப்புத் துறை அமைச்சர் லெப்டினென்ட் ஜெனரல் ரிச்சர்ட் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதைத்தொடர்ந்து ஈடிவி பாரத் உடனான ஒரு பிரத்யேக உரையாடலில், “இந்தியாவை ஒரு சிறந்த நண்பர்” என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த சில வாரங்களில் இந்திய கடற்படை, பாதிக்கப்பட்ட மலகாசி மக்களுக்கு ‘ஆபரேஷன் வெண்ணிலா’ மூலம் உதவிகளை வழங்கியது.
நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐ.என்.எஸ் ஐராவத் கப்பல் விரைவாக அங்கு திருப்பி விடப்பட்டது.
அதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டன. கடந்த வாரம் லக்னோவில் நடந்த பாதுகாப்பு கண்காட்சி 2020 இன் இரண்டாவது நாளில் ராஜ்நாத் சிங் மற்றும் லெப்டினென்ட் ஜெனரல் ரிச்சர்ட் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல்களில் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது.
‘கடல்சார் அண்டை நாடுகளில் வர்த்தகம் செழித்து வளர ஒரு பாதுகாப்பான கடல் சூழலை உறுதி செய்யவதில் இரு நாடுகளுக்கும் பொறுப்பு உள்ளது’ என்று சிங் வலியுறுத்தினார்.
I was delighted to meet Madagascar Defence Minister, Lt Gen Rokotonirina Richard on the sidelines of @DefExpoIndia in Lucknow.
We had a good interaction on ways to diversify India-Madagascar friendship and defence cooperation. pic.twitter.com/K6cxN0GAng
— Rajnath Singh (@rajnathsingh) February 6, 2020
லெப்டினென்ட் ஜெனரல் ரிச்சர்ட், ‘இந்திய பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பைப் உறுதி செய்வதில் இந்தியாவுக்கு பெரும் பங்கு உண்டு’ என்று வலியுறுத்தினார்.
இந்தியாவின் மனிதாபிமான உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மடகாஸ்கரின் அதிபர் ராஜோலினா செய்த ட்வீட்டுக்கு பதிலளித்த பிரதமர் மோடி, “இந்தியப் பெருங்கடல் மடகாஸ்கருடன் இணைக்கப்பட்டுள்ளது.
நல்ல மற்றும் மோசமான நேரங்களிலும் மடகாஸ்கருடன் நிற்க இந்தியா உறுதிப்பூண்டுள்ளது. ‘பிராந்தியத்தில் உள்ள அனைவரின் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும்’ (‘சாகர்’, இந்தியில் கடல் என்று பொருள்) உங்களுடன் பணியாற்ற நான் விழைகிறேன்” என்று ட்வீட் செய்தார்.
மேற்கு இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் ஜிபூட்டி பகுதியிலுள்ள தனது ராணுவத் தளத்தின் மூலம் சீனாவின் ஆதிக்க அதிகரித்துவரும் சூழ்நிலையில், இந்தியா ஆப்பிரிக்க நாடுகளுடன் ஒத்துழைப்பை பெறுகிறது.
இந்த வியூகத்திற்கு ஏற்ப முதல் இந்தியா ஆப்ரிக்கா பாதுகாப்பு அமைச்சர்களின் மாநாடு 2020 பிப்ரவரி 6ஆம் தேதி லக்னோவில் நடந்த 11ஆவது ‘பாதுகாப்புக் எக்ஸ்போ இந்தியா 2020″இன் போது நடைபெற்றது
Thank you, President @SE_Rajoelina. Connected to Madagascar by the Indian Ocean, India is committed to stand with Madagascar through thick and thin. I look forward to working with you for ‘Security And Growth of All in the Region’ (‘SAGAR’, which in Hindi means ocean). https://t.co/wNnn4rmcWd
— Narendra Modi (@narendramodi) February 5, 2020
இந்தியா கடந்த சில ஆண்டுகளில் நைஜீரியா, எத்தியோப்பியா மற்றும் தான்சானியா உள்ளிட்ட நாடுகளில் பாதுகாப்பு அகாடமிகள் மற்றும் கல்லூரிகளை அமைத்துள்ளது.
மேலும், போட்ஸ்வானா, நமீபியா, உகாண்டா, லெசோதோ, சாம்பியா, மொரீஷியஸ், சீஷெல்ஸ், தான்சானியா உள்ளிட்ட பல ஆப்பிரிக்க நாடுகளில் பயிற்சி குழுக்களை அனுப்பியதுடன், நல்லெண்ண கப்பல் வருகைகள் மற்றும் பாதுகாப்பு பயிற்சி திட்டங்களையும் நடத்தியது.
“2019ஆம் ஆண்டில் மொசாம்பிக்கில் இடாய் சூறாவளியின்போது உதவி மற்றும் பேரழிவு நிவாரண நடவடிக்கைகளில் இந்திய பாதுகாப்புப் படைகளின் பங்களிப்பையும், 2018இல் சிக்கித் தவித்த 41 நாடுகளைச் சேர்ந்த நபர்களை நபர்களை வெளியேற்றியதையும், இதுபோல மேலும் பல உதவிகளையும் சரியா நேரத்தில் வழங்கியதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்”பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பயங்கரவாதம், திருட்டு, ஆட்கடத்தல், போதைப்பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களின் பொதுவான சவால்களை உணர்ந்து, மேலும் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுத்தது இந்த பாதுகாப்பு அமைச்சர்களின் மாநாடு.
“முதலீடு, பாதுகாப்பு உபகரணங்கள், மென்பொருள், டிஜிட்டல் பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, பாதுகாப்பு உபகரணங்களை வழங்குதல், உதிரிபாகங்கள் உள்ளிட்டவற்றில் ஆழ்ந்த ஒத்துழைப்புக்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்” என்று மாநாட்டு அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
Lucknow Declaration after successful completion of 1st India-Africa Defence Ministers Conclave-2020 https://t.co/9GlU7XhV2r pic.twitter.com/MbEFfu7Xio
— India in Madagascar & Comoros (@IndembTana) February 6, 2020
மூத்த பத்திரிகையாளர் ஸ்மிதா ஷர்மாவுடனான இந்த உரையாடலில், வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் பாதுகாப்பு திறன்களை மாற்ற இந்தியா உதவ முடியும் என்று பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில் மடகாஸ்கரில் இந்த ஆண்டு ஜூன் 26 அன்று நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளமாறு இந்திய பாதுகாப்பு அமைச்சருக்கு அழைப்புவிடுத்துள்ளது.
மூத்த பத்திரிகையாளர் ஸ்மிதா ஷர்மா நடத்திய கலைந்துறையாடல்
கேள்வி: மடகாஸ்கரில் சமீபத்திய ஏற்பட்ட சூறாவளிகள் எந்த அளவுக்கு அழிவை ஏற்படுத்தின?
பதில்: கடைசியாக பெய்த பலத்த மழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இது உயிரிழப்பு, உடைமைகள் இழப்பு என இரண்டிலும் பெரும் இழப்பை ஏற்படுத்தியது.
அதிகாரப்பூர்வமாக, இருபத்தொரு பேர் இறந்துவிட்டார்கள். இருபது பேர் மாயமானார்கள். கிட்டத்தட்ட 80 ஆயிரம் பேர் வீடுகளை இழந்தனர்.
கேள்வி: சூறாவளி பாதிப்பு ஏற்பட்ட நேரத்தில் இந்தியாவின் உதவியது எவ்வாறானது? டெல்லியிலிருந்து நீங்கள் மேலும் எதிர்பார்ப்பது என்ன?
பதில்: இந்திய அரசின் உதவி உண்மையிலேயே மிக முக்கியமானது. ஏனெனில் கிட்டத்தட்ட ஐந்து டன் உணவு மற்றும் மருந்துகள் கொண்டு வரப்பட்டதோடு, சுகாதார சேவையும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கடினமான நேரத்தில் குறுகிய காலத்திற்குள் மலகாசி மக்களுக்கு உதவவந்த ஒரு சிறந்த நண்பராக இந்தியாவை பார்க்கிறோம்.
கேள்வி: இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பு வழங்கும் பொறுப்பை ஏற்கும் அளவுக்கு இந்தியாவுக்கு திறன் உள்ளதா?
பதில்: இந்தியா, அதன் திறமை மற்றும் உலகளாவிய நற்பெயருக்காக சிறந்து விளங்கும் ஒரு பெரிய நாடு. உலகின் பிற நாடுகளை ஈர்க்கும் சக்தியை பாதுகாப்பு கண்காட்சி மூலம் நிரூபித்துள்ளது . மேலும், ஆப்பிரிக்க நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் தங்கள் இந்திய அமைச்சர்களுடன் கலந்துரையாடியது, இந்தியாவின் கணிணி தொழில்கள் மீது ஆப்பிரிக்க நாடுகளின் ஆர்வம் அதிகரித்துவருவதைக் காட்டியது. மேலும், முன்னேற்றம் மற்றும் தொழில்நுட்ப வலிமை ஆகியவை இந்தியாவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த தொடங்கியுள்ளன.
கேள்வி: லக்னோவில் நடந்த பாதுகாப்பு கண்காட்சியிலிருந்து நீங்கள் எதை விரும்புகிறீர்கள்? உங்கள் அனுபவம் எப்படி இருந்தது?
பதில்: பாதுகாப்பு கண்காட்சி என்பது அனைத்துக்கும் மேலாக ஒரு நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகும். ஏனெனில் இது ஒழுங்கமைக்கும் நாட்டின் திறனை நிரூபிக்கிறது.
பாதுகாப்பு டிஜிட்டல் மயமாக்கலின் அடிப்படையில் இந்தியாவின் செயல்திறன் வளர்ந்துவரும் நாடுகளின் பாதுகாப்பை மாற்றுவதற்கான எதிர்கால பாதையைத் திறக்கிறது.
ராணுவ விவகாரங்களில் புரட்சி என்பது ஒரு மழுப்பலான கருத்து அல்ல. திடீரென்று, எல்லைக் கட்டுப்பாடு அல்லது மாநிலத்திற்குள் சட்ட விரோதமான ஆயுதத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்துதல் போன்ற தொடர்ச்சியான பாதுகாப்பு சிக்கல்களைத் தீர்க்க குறைந்த மட்டத்திலும்கூட இந்த டிஜிட்டல்மயமாக்கல் உதவலாம்.
கேள்வி: இந்தியாவிற்கும் மடகாஸ்கருக்கும் இடையில் நீங்கள் எந்த வகையான ராணுவ மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறீர்கள்?
பதில்: லக்னோவில் நடந்த பாதுகாப்பு கண்காட்சியின் ஒரு பகுதியாக, மடகாஸ்கர் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது.
இந்தியா-ஆப்பிரிக்கா ஒத்துழைப்பின் கட்டமைப்பிற்குள் எப்போதும் சர்வதேச பாதுகாப்பை மேம்படுத்துவதே முக்கிய குறிக்கோள்.
எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியாவுக்கு ஆப்பிரிக்காவுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதற்கு தென்னாப்பிரிக்காவில் படித்த காந்தியின் விஷயம் மட்டும் காரணமில்லை, தற்போதைய இந்திய பிரதமருக்கும் ஜிம்பாப்வேவுடன் தொடர்புள்ளது.
இதுமட்டுமின்றி அணிசேரா நாடுகளின் கருத்தை இந்தியா தொடங்கியது என்பதும் உண்மை. இவை அனைத்தும்தான் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த நம்மைத் தூண்டுகின்றன.
மடகாஸ்கர் அமைந்துள்ள பெருங்கடலும் “இந்தியன்” (மடகாஸ்கர் இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ளது) என்ற பெயரைக் கொண்டுள்ளது. இது எல்லாவற்றிற்கும் மேலாக, மாநாட்டில் கலந்துகொண்ட இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படுகிறது.