இந்தியா – சீனா இடையே தூதரக ரீதியிலான உறவு தொடங்கி 70-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஆகியோர் இன்று வாழ்த்துச் செய்திகளைப் பரிமாறிக் கொண்டனர். இந்தியா, சீனா இடையே தூதரக ரீதியிலான உறவு ஏற்பட்டு 70 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் வகையில், இரு நாடுகளும் இணைந்து அடுத்த ஆண்டு 70 நிகழ்ச்சிகளை நடத்த கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவு செய்யப்பட்டிருந்தது. மாமல்லபுரத்தில் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் நடைபெற்ற பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷீ ஜின்பிங் இடையிலான சந்திப்பின்போது மேற்கொள்ளப்பட்ட முடிவின்படி இந்நிகழ்ச்சிகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த நிகழ்ச்சிகள் கைவிடப்பட்டன.
மேலும், 70வது ஆண்டு உறவை நினைவுக்கூறும் விதமாக பிரதமர் மோடியும் சீன அதிபரும் தங்களது வாழ்த்து செய்திகளை பரிமாறிக் கொண்டனர். நட்பு, ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நன்மை ஆகியவற்றால் வரையறுக்கப்பட்ட ஒரு உறவு இரு நாடுகளின் மற்றும் மக்களின் அடிப்படை நலன்களுக்கு உதவும் என்றும், ஆசியா மற்றும் உலகிற்கு பெருமளவில் பயனளிக்கும் என்றும் பிரதமர் லி கெக்கியாங் கூறினார். இதையடுத்து, இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதிலிருந்து கடந்த 70 ஆண்டுகளில், இந்தியா-சீனா அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகள் சீராக விரிவடைந்துள்ளதாக பிரதமர் மோடி தியேறிவித்துள்ளார். இந்தியாவும் சீனாவும் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும், ஒருவருக்கொருவர் ஒன்றுபட வேண்டும் மற்றும் உலகம் எதிர்கொள்ளும் சவால்களை கூட்டாக சமாளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.