இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் கொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை வழங்கக் கூடாது என்று முன்வைத்த கோரிக்கைக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசிகளுக்கு காப்புரிமை வழங்கக்கூடாது என்று இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா உலக வர்த்தக அமைப்பிடம் கோரிக்கை முன்வைத்தது .ஆனால் இதற்கு அமெரிக்கக் குடியரசு கட்சியை சேர்ந்த மைக்லீ,ஜோனி ஏர்னஸ்ட், டாட் யாங் ,டாம் காட்டன் ஆகிய 4 எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் அமெரிக்க அதிபரான ஜோ பைடனுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளனர்.அதில் கொரோனா தடுப்பூசியின் காப்புரிமைகளை ரத்து செய்ய வேண்டும் என்று இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா கோரிக்கை விடுத்துள்து.
அவ்வாறு நாம் ரத்து செய்தால் பல நாடுகள் கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் என்ற எண்ணத்தில் அந்த நாடுகள் பரிந்துரைத்துள்ளது. ஆனால் உண்மையான காரணம் காப்புரிமையை நாம் ரத்து செய்தால் அந்த நோய்க்கு எதிரான அறிவியல் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும். மேலும் சில நாடுகள் அமெரிக்க நிறுவனங்களின் காப்புரிமை பறிக்கப்பட்டால் அவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும் என்று நம்புகின்றனர் .அது தவறான நம்பிக்கை என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.